மிகப்பெரிய சமூக இணைய தளமான பேஸ்புக்கில் உங்களின் ட்விட்டர் போஸ்ட்களை Auto Publish செய்து விடலாம். நீங்கள் ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த நிமிடமே பேஸ்புக்கிலும் உங்களுடைய போஸ்ட் தானாக பப்ளிஷ் ஆகிவிடும். இதனால் இரண்டு தளங்களில் தனித்தனியாக தகவல்களை அப்டேட் செய்ய வேண்டியதில்லை. இந்த புதிய பயனுள்ள வசதியை உங்கள் கணக்கிலும் கொண்டு வர கீழே உள்ள வழிமுறையை கையாளுங்கள்.
- முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அடுத்து Settings செல்லுங்கள். இது உங்கள் பயனர் பெயர் இருக்கும் இடத்தில் இருக்கும்
- அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Profile Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் அதில் பேஸ்புக் தளம் உங்களுடன் அனுமதி கேட்கும் அதில் Allow என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் கடைசியாக உங்களுடைய செட்டிங்க்ஸ் மாற்றப்பட்டு ட்விட்டர் தளத்தில் கீழே இருப்பதை போல வரும் அதில் உள்ள Save பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் இனி உங்களின் ட்விட்டர் அப்டேட்ஸ்கள் தானாகவே பேஸ்புக்கிலும் பகிரப்படும்.
0 comments:
Post a Comment