அடிக்கடி புது புது வசதிகளை
அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன்
தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும்
வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல்
கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை
மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு
புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை
உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.
நீங்கள் சாட் செய்யும் போது சாட்
விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால்
கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும்.
எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும்.
முதல் படத்தில் மேலே சாம்பல் நிறத்தில்
(Gray Color) தெரிவாகி உள்ளவற்றிற்கு அடுத்து உள்ளவற்றை தெரிவு செய்தால்
விதவிதமான Stickers உங்களுக்கு கிடைக்கும். கடைசியாக உள்ள ஐகானை கிளிக்
செய்தால் Sticker Store க்கு செல்லலாம்.
இதில் Free என்பதை கிளிக் செய்தால்
குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை
உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும்
இலவசமாக கிடைக்கின்றன
0 comments:
Post a Comment