Saturday, July 27, 2013

வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற

6:13 AM Posted by Basith , No comments



சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான்என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 
இதில் 2D யிலிருந்து 3D.3Dயிலிருந்து 3D.3Dயிலிருந்து 2டி என மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்குதேவையானதை தேர்வு செய்யவும். நான் 2டியிலிருந்து 3டியாக மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளேன்.இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நான்குவிதமான மாடல்கள்கொடுத்துள்ளார்கள்.மேலும் 3டியின் அளவினையும் அதிகரி்த்துக்கொள்ள இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி கொள்ள்லாம்.



இதில் உள்ள அவுட்புட் செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வ செய்துகொள்ளலாம்.


ஒ.கே.கொடுத்தபின்னர் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.நமது வீடியோ கன்வர்ட்் ஆவதை காணலாம்.

 

நமது வீடியோ கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோவானது 3டி வீடியோ படமாக மாறிஉள்ளதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

0 comments:

Post a Comment