ஆம் நண்பர்களே.. நீங்களே உங்கள் கணினியிலேயே ஒரு புதிய சாப்ட்வேரை (New software)உருவாக்கி சோதனை செய்தும் பார்க்கலாம். மிக எளிமையானதாக இருக்கும் சாப்ட்வேர் உருவாக்கும் முறையைப் பார்ப்போம்.
சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.