உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப்(skype) நண்பர்களுடன் இனி டயலொக்(Dialog) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இந்த இலகு செயன்முறையினை கையாளவும்.
01. skype இடைவெளி skype user id என்பவற்றை டைப் செய்து 678 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். இந்த SMS ற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது. Ex. skype<space>asfereseak to 678
02. நீங்கள் ஒரு குறியீட்டு இலக்கம் ஒன்றினை SMS மூலம் பெறுவீர்கள். Ex. *#52290
03. அவ்வாறு கிடைக்கப்பெற்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் ஸ்கைப் நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு பெற்ற இலக்கத்தினை save செய்து வைப்பதன் மூலம் பின்பு சாதாரணமாக தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதுபோல் பயன்படுத்தலாம்.இவ்வாறு ஏற்படுத்தப்படும் அழைப்பினை பெற ஸ்கைப் அப்ளிகேசனில் காணப்படும் Privacy settings எனும் பகுதியில் Allow any one to contact me என்பதை தெரிவு செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
0 comments:
Post a Comment