Cc: Carbon Copy
நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.
Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐடி , Cc யில் மற்றவர் ஐடி.
இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
0 comments:
Post a Comment