Thursday, March 8, 2012

இணையப் பக்கங்களை பிடிஎப் (PDF) கோப்பாக சேமிக்க

8:19 AM Posted by Unknown No comments







பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும். 

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள பிடிஎப் கோப்பாக மாற்றி உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எளிதில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பல்வேறு இணையதளங்கள் இது போன்ற சேவையை வழங்கினாலும் திருப்திகரமாக இல்லை. சில சேவைகளில் படங்கள் சரியாக தெரிவதில்லை. சிலவற்றில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை. 





PDFMyUrl.com இந்த சேவையை வழங்குவதில் இந்த தளம் மிக சிறந்ததாக இருக்கிறது. இணைய பக்கத்தில் உள்ள படங்கள், அதன் வடிவம் முழுமையாக பிடிஎப் கோப்பாக சேமிக்கப்படுகிறது.  URL பகுதியில் நீங்கள் பிடிஎப் ஆக மாற்ற வேண்டிய இணையப் பக்கத்தின் முகவரியை (URL) கொடுத்து என்டர் தட்டினால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப் கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.




0 comments:

Post a Comment