Tuesday, August 27, 2013

உங்கள் ஸ்மார்ட் போனை பாதுகாக்க 5 வழிகள்.

11:16 PM Posted by Basith , No comments

உங்களுடைய விலைமதிப்பு மிகுந்த ஸ்மார்ட்போனை பாதுகாக்க சிறந்த ஐந்து வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாஸ்கோட் (Passcode)

ஸ்மார்ட் போன் திரையை கடவுச்சொல் (Password) கொடுத்து தானாகவே பூட்டும்படி வைக்க வேண்டும். அதாவது நீங்கள் மட்டுமே உங்களுடைய ஸ்மார்ட் போனை திறக்கும்படி வைப்பது நல்லது. அதற்கு உங்களுடைய ஸ்மார்ட்போனிலேயே அமைப்புகள் (Smartphone settings) உண்டு. திரையை லாக்செய்யும் (Screen lock)முறையால் மற்றவர்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை உங்களுடைய அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.


புளூடூத், வைஃபை செட்டிங்

புளுடூத், வைபை (Settings of Bluetooth, WiFi) போன்ற கனெக்டிவிட்டி பயன்பாடுகளை பயன்படுத்தாமல் உள்ளபொழுது அதை நிறுத்தி வைக்க வேண்டும்.

தரமான அப்ளிகேஷன்
இணையத்தில் ஆண்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு முன்பு, அவை தரமானதுதானா (Quality android apps)என்பதை உறுதிப்படுத்திய பின்னரே டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். அப்ளிகேஷனின் தரத்தை அறிய அத்தளங்களில் உள்ள ரேட்டிங்ஸ், அதைப்பற்றி விமர்சனங்கள் ஆகியவைகள் உங்களுக்கு உதவும்.

ஆண்டி வைரஸ்

தொழில்நுட்பங்கள் அதிகம் வளர வளர அதற்கான வைரஸ் புரோகிராம்களும் அதிகரித்துவருகிறது. நீங்கள் எந்த ஒரு ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தாலும், கட்டாயம் அதில் ஆண்ட்டி வைரஸ் மென்பொருளும் (Anti-Virus Software for Android Devices)இடம்பெற்றிருக்க வேண்டும். இணையத்தில் நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது மென்பொருள் டவுன்லோட் செய்யும்பொழுது அதனுடன் வைரஸ் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் ஆண்ட்டி வைரஸ் உங்களுடைய போனில் இருப்பது மிக மிக அவசியம்.

டிராக் மொபைல் அப்ளிகேஷன்

இந்த அப்ளிகேஷன் உங்களுடைய ஆண்ட்ராய் போனில் கண்டிப்பாக இருப்பது நல்லது. இதுவரைக்கும் இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இல்லையென்றால் முதலில் இதை (Track Mobile apps) தரவிறக்கி நிறுவுங்கள். இது உங்களுடைய தொலைந்துபோகும்பொழுது அல்லது திருடுபோய்விட்டால் மொபைல் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும்.

மேற்கண்ட ஐந்து வழிமுறைகளையும் நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்.

0 comments:

Post a Comment