Tuesday, February 5, 2013

டைட்டன் வழங்கும் இலவச ‘ஆன்லைன்’ கண் பரிசோதனை!

2:59 AM Posted by Basith 1 comment


titan-logo-home
பிரபல கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான டைட்டன் டைட்டன் ஐ+ கண் பரிசோதனையை இலவசமாகவே தற்போது வழங்குகிறது, இதை ஆன்லைனிலேயெ பயன்படுத்தி பார்க்க முடியும் என்பது தான் கூடுதல் ஸ்பெஷல்.

மேலும் இந்த நிறுவனம் இந்த சேவையை, தமிழ் உட்பட 7 இந்திய மொழிகளில் வழங்குகிறது. ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களும் கூட இதில் பங்குபெற்று பயன்பெறும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘விஷன் செக்’ என்ற இந்த ஆன்லைன் பரிசோதனைக்கு முதலில் உங்களுக்கு தேவையான மொழியினை தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் பயனாளர் பெயர், இமெயில், மற்றும் பாஸ்வேர்டு இவற்றுடன் உங்கள் மொபைல் எண்ணையும் கொடுத்து பதிவுசெய்ய வேண்டும்.
அப்படி செய்த உடன் உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்த ஒரு குறியீட்டு எண் அனுப்பப்படும். அதை சரியாக கட்டத்தில் கொடுத்தவுடன் உங்களுக்கான 5 பக்க பரிசோதனை தொடங்கப்படும்.
இதை கண்களில் கோளாறு உள்ளவர்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. யாராக இருந்தாலும் உபயோகப்படுத்திப் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
பரிசோதனை செய்ய இங்கே செல்லுங்கள் :

1 comment:

  1. Occasionally, you can find a short term marriage at a bar or club.
    In other words, it will become assimilated into the environment.


    my web site: tanie wczasy

    ReplyDelete