Friday, July 20, 2012

Android Mobile " Wrong & Missed Call, தொல்லையா..??

9:46 PM Posted by Unknown , , , , 1 comment


தொலை தொடர்பாடலில் பெரும்பங்கு வகிப்பவை கையடக்க தொலைபேசிகளே. அதி உன்னத வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கையடக்க தொலைபேசிகளால் சில எரிச்சலூட்டும் விடயங்களும்
இல்லாமலில்லை. பல நேரங்களில் வேண்டத்தகாத Call கள், SMS கள் என அவதிப்படவேண்டி வரும். இப்படியான சந்தர்ப்பங்களில், உங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை மாத்திரம் Block பண்ணுவதற்கென பல மென்பொருள்கள் உள்ளன.

அந்த வகையில் Android தொலைபேசிகளுக்கான சிறந்த 5 Call Block மென்பொருட்களின் பட்டியலை இங்கே தருகிறேன்.

Call Blocker from NQMobile



கையாள்வதற்கு இலகுவான application. Block செய்யவேண்டிய நபரின் தொலைபேசி இலக்கத்தை இங்கு கொடுத்து அவரிடம் இருந்து வரும் அழைப்புக்களை Block பண்ணலாம். அத்தோடு இந்த application ஊடாக SMS களையும் Block பண்ணலாம்.


இந்த application ஐ பெற்றுக்கொள்ள Call Blocker from NQMobile


இந்த application இற்கு பாவனையாளர்கள் வழங்கியுள்ள Ratings

5 star 6,036
4 star 2,213
3 star 732
2 star 212
1 star 625

Average rating:
4.3
9,818




Call Control – Call Blockerfrom KEDLIN



Call Block செய்வதற்கு இதுவும் ஒரு சிறப்பான application. இந்த application மூலம் SMS களையும் Block பண்ணலாம். இதில் உள்ள கூடுதல் வசதி என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்குரிய Aria Code ஐ கொடுத்து Block பண்ணுவதன் மூலம், குறிப்பிட்ட அந்த பிரதேசத்திலிருந்து வரக்கூடிய அத்தனை அழைப்புக்களையும் Block பண்ணலாம்


இந்த application ஐ பெற்றுக்கொள்ள Call Control – Call Blockerfrom KEDLIN


இந்த application இற்கு பாவனையாளர்கள் வழங்கியுள்ள Ratings

5 star 9,686
4 star 3,977
3 star 1,182
2 star 402
1 star 763

Average rating:
4.3
16,010


Call Filter from Telemarks

இது ஒரு சிறிய application. Call களை மாத்திரம் Block பண்ணுவதற்கான application. பயன்படுத்துவதும் எளிது. உங்களது நோக்கல் Call களை மாத்திரமே Block பண்ணுவது எனில் இந்த application ஐ பயன்படுத்தலாம்.


இந்த application ஐ பெற்றுக்கொள்ள Call Filter fromTelemarks


இந்த application இற்கு பாவனையாளர்கள் வழங்கியுள்ள Ratings



5 star 5,416
4 star 2,044
3 star 831
2 star 278
1 star 594

Average rating:
4.2
9,163






Call Block from George Android



Call, SMS Block பண்ணுவதற்கு சிறப்பானதொரு Application. இதில் கூடுதல் வசதியாக தேவையேற்படும்போது Block பண்ணிய இலக்கத்தில் இருந்து வந்த Call, SMS பற்றிய விடயங்களை பார்த்துக்கொள்ளலாம்.


இந்த application ஐ பெற்றுக்கொள்ள Call Block fromGeorge Android


இந்த application இற்கு பாவனையாளர்கள் வழங்கியுள்ள Ratings

5 star 836
4 star 247
3 star 116
2 star 57
1 star 230

Average rating:
3.9
1,486




Drioid call Filter from Android Dev



இந்த Application இல் Call Block மாத்திரமல்லாது Call Forward வசதியும் உள்ளது.


இந்த Application ஐ பெற்றுக்கொள்ள Drioidcall Filterfrom AndroidDev


இந்த application இற்கு பாவனையாளர்கள் வழங்கியுள்ள Ratings

5 star 669
4 star 272
3 star 111
2 star 66
1 star 253

Average rating:
3.8
1,371

1 comment:

  1. என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
    நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
    நன்றி

    ReplyDelete