Thursday, May 31, 2012

மொன்பொருள் இல்லாமல் Folder Lock/Hide செய்யலாம்

3:29 AM Posted by Unknown , , 1 comment




நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி கூறுகிறேன்.  இது மிக எளிது. ஏற்கனவே ஒரு வழிநான் கூறி இருந்தாலும் இது அதை விட எளிது.


முதலில் Start--->Run--->cmd

இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:\Documents and Settings\content இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc ) 


இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது 



D:/>attrib +h +s Folder Name 

Folder Name--> Your Folder Name. 
இப்போது உங்கள் Folder  மறைந்து இருக்கும். அதை மீண்டும் தெரிய வைக்க 

D:/>attrib -h -s Folder Name 
நீங்கள் Hidden folder கள் இருந்தாலும் யாரும் பார்க்க முடியாது. நீங்கள் மட்டுமே இதை திரும்ப கொண்டுவர முடியும். 
  

Password எதுவும் நினைவில் கொள்ள தேவை இல்லை நீங்கள். attrib ±h, ±s. இதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். 

NB:
இதில் முக்கியமான விஷயம் C Drive இல் உள்ள folder களை மட்டும் இதில் மறைக்க இயலாது. 


1 comment: