Friday, August 31, 2012
Android Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..!
தொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது செல்பேசி(Cellphone). அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு புதிய பிறப்பெடுத்திருக்கிறது புதிய செல்பேசிகள். அவற்றுள் குறிப்பிட்டு சொல்வதெனில் Android Mobiles சொல்லலாம்.
Android தமிழ் மொன்பொருட்கள் இலவசம்
இன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென்ற பதிவில் பார்த்தது போல ஆன்ட்ராய்ட் போன்களுக்காகவே Google Playயில் பல அப்ளிகேஷன்களை இலவசமாக பெற முடியும்.
இன்றையப் பதிவில் ஆன்ட்ராய்ட் போன்களுக்கான இலவச அப்ளிகேஷன்கள் ஐந்தினைப் பார்ப்போம்.
ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில்(Android operating system) தமிழை அடிப்படையாக கொண்ட பல அப்பிளிகேஷன்கள் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
1. Google Translate:
Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. இதை உங்கள் Android Mobile-களில் அப்ளிகேஷனாக தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால், தேவையானபோது எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த Google Translate Application-ஐ இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate&hl=en செல்லவும். இதில் அமைந்திருக்கும் சிறப்பு 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம் என்பதே. இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யலாம்.
2. English To Tamil Dictionary:
சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள் புரிந்தாலும், அவற்றிற்குரிய சரியான தமிழ் அர்த்தம், தமிழ் வார்த்தை தெரியாது. அதுபோன்ற நிலைகளில் ஆங்கிலவார்த்தைகளுக்கு சரியான தமிழ் பதத்தை கண்டறிய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயன்படும். இங்கிலீஸ் டு தமிழ் டிக்சனரி என்ற இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.burningpassion.tamildictionary&feature=search_result
இது முற்றிலும் இலவசமே..!
3. Youtube Tamil Movies
Youtube Tamil Movies என்ற இந்த அப்ளிகேஷன் சினிமா பிரியர்களுக்கும், யூ டியூபிள் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலம் டியூபில் உள்ள Movie Trailer, short film, education videos, technology videos, போன்ற வீடியோக்களை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலேயே பார்த்து மகிழலாம்.
இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.movies.youtube&hl=en
4. Yosi Application
Yosi Application மூலம் பழமொழிகள், முதுமொழிகள், விடுகதைகள் ஆகியவற்றின் தொகுப்புகளை காணமுடியும். இந்த யோசி அப்ளிகேஷன் சிறியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.
https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&feature=search_result
5. AR Rahman Tube Tamil application:
A.R. Rahman Tube Tamil appication மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களில் உலகப் புகழ்ப்பெற்ற இசைகளை கேட்டு மகிழலாம். இது முற்றிலும் இலவச அப்ளிகேசன்ஸ் ஆகும்.
இந்த அப்ளிகேஷன்னை இலவசமாக டவுன்லோட் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.video.arrahman&hl=en
Contact Form வைப்பது எப்படி? Blogger Tip
நமது வாசகர்கள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வலைப்பூவின் மூலம் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பலர் தமது ப்ரொஃபைலில் தங்கள் ஈமெயில் ஐடி தந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஸ்பாம் மெயில்கள் வருவது தவிர்க்க முடியாது. இன்னும் சிலர் கமெண்ட் மாடரேசன் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் சொல்ல விரும்பினால் அதில் சொல்லி, இதை வெளியிட வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். அவ்வாறு வைக்காத போது தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினை தான்.
அதாவது, உங்கள் ஈமெயில் ஐடி தெரியாமலே உங்களுக்கு அடுத்தவர் ஈமெயில் அனுப்பலாம். இந்த வசதியை www.emailmeform.com இலவசமாகத் தருகிறது. இத்தளத்துக்குச் சென்று நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, சில விவரங்களை அளித்து உங்கள் EMAIL FORM எப்படித் தோன்ற வேண்டும் என்று சொல்லி விட்டால் போதும்.
எப்படி என்று பார்ப்போம்,
அதில் கணக்கை தொடங்கிய உடன் Add Form என்பதை தெரிவு செய்து Templates பகுதிக்கு வரவும். அதில் Contact From என்பதை தெரிவு செய்யுங்கள். அதில் Customize என்பதை தெரிவு செய்யுங்கள்.
இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.
Add Field - இதில் தேவையான பகுதியை கிளிக் செய்து தெரிவு செய்து கொள்ளலாம். இதில் File, email, Dropdown என பலவற்றை சேர்க்கலாம்.
Field Settings - இங்கே பெயர், எழுத்துரு மாற்றம் போன்றவற்றை செய்யலாம். உதாரணமாக Name என்று உள்ளதை பெயர் என்று மாற்ற விரும்பினால் அதை செய்யும் பகுதி.
Form Settings - இதில் Form Title, Description, Alignment போன்றவற்றை மாற்றலாம். இதில் உள்ள Confirmation Options பகுதியில் Success Message என்பதை கொடுத்து விட்டு Open in a new window / tab என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
எல்லாம் முடிந்த பின் Save Form கொடுத்து Save செய்து விடுங்கள்.
இப்போது My Forms பகுதிக்கு நீங்கள் உருவாக்கிய Form-இல் Code என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.
இப்போது வரும் பகுதியில் HTML Only என்பதை கிளிக் செய்து வரும் கோடிங்கை உங்கள் ப்ளாக்கில் Page/Post - ல் HTML பகுதியில் Paste செய்து விடுங்கள்.
அவ்வளவு தான் இனி அழகான Form உங்கள் வலைப்பூவில் இருக்கும். உங்கள் வாசகர்கள் எளிதில் உங்களை தொடர்பு கொள்ள முடியும். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
* நீங்கள் emailmeform தளத்தில் எந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து உள்ளீர்களோ அதற்கு தான் இந்த மின்னஞ்சல்கள் வரும்.
Wednesday, August 22, 2012
கணினிகளுக்கு WiFi மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த
WiFi மோடம் செயல்படும் விதம். |
பெரிய பெரிய கம்பெனிகளுக்கு குழு இணைப்புக் கட்டணம் சாத்தியமாகும். ஆனால் வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு அவ்வாறு குழு இணைப்பைப் பெற்று பயன்படுத்த முடியாது. காரணம் அதிக செலவாகும். இணைய பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகும்.
உங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை வெவ்வேறானவர்கள் பயன்படுத்தும்போது, ஒரே சமயத்தில் இரு கணிகளுக்கும் இணைய இணைப்பு வேண்டுமெனில் என்ன செய்வது?